Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு மேல்நிலைப் பள்ளியில்…. நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம்…. திரளான மாணவர்கள் பங்கேற்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளையாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நாட்டு நல பணித்திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த முகாமில் டி.மீனாட்சிபுரம் பகுதியில் மியாவாக்கி குறுங்காடுகள் அமைப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணியும் பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியும் நடைபெற்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலமும் பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் வெள்ளையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அழகர்சாமி, திருவிருந்தாள்புறம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நாட்டு நல பணி திட்ட அலுவலர் வேல்முருகன், டி.மீனாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமன், உதவி திட்ட அலுவலர் சப்பாணி முத்து மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |