Categories
உலக செய்திகள்

பெண்களுக்கும் அரசுப்பணி…. உறுதியளித்த தலிபான்கள்…. அமெரிக்க படைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!

ஆப்கானிஸ்தான் அரசுப்பணிகளில் பெண்களும் பணி அமர்த்தப்படுவார்கள் என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தலிபான்கள் உறுதியளித்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களுடைய புதிய ஆட்சியை அமைப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க படைகள் அந்நாட்டில் படித்த மருத்துவர்கள் உள்ளிட்ட திறமையானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேலும் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் தங்களுடைய இல்லத்திற்கு திரும்புமாறு தலிபான்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு பணிகளில் பெண்களுக்கும் உரிமையுண்டு என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |