அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் தாலுகா மேட்டமலை அருகில் சிவகாசியிலிருந்து-கோவில்பட்டிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று மேட்டமலை அருகில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ராமமூர்த்தி, சுப்புராஜ், மணிராம், முகமது பைசல், அருள்ராஜ் மற்றும் ராகுல் பிரன்னா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதனையடுத்து பலத்த காயமடைந்த 6 பேரை பேருந்தில் பயணம் செய்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.