அரசு பேருந்து மோதி பனியன் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் நெகமம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று செல்வராஜின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வராஜின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.