Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த அரசு பேருந்து…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாமண்டூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அரசு பேருந்து காமராஜ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த காமராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் காமராஜை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் காமராஜை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தூசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |