Categories
விளையாட்டு

‘அரசு வேலை கிடைக்குமா’ ….?மாற்று திறனாளி வீராங்கனையின் துயரம் …!!!

சதுரங்க வீராங்கனை மலிகா ஹண்டா மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவற விட்டதாக குற்றச்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்தவர் சதுரங்க வீராங்கனை மலிகா ஹண்டா.இவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு  பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் கொரோனா  தொற்று பரவல்  காரணமாக கட்டுப்பாடுகள் மற்றும் நாடு தழுவிய ஊரடங்கு  மலிகா ஹண்டாவின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அதோடு காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத வீராங்கனைமலிகா ஹண்டாவுக்கு தற்போதைய தேவை அரசு வேலையும் ,வெகுமதியும் தான் .ஆனால்  பஞ்சாப் மாநில அரசு தன்னை ஏமாற்றி விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில்,’ முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் எனக்கு  ரொக்க வெகுமதியை அறிவித்திருந்தார். இதற்கான அழைப்பு கடிதமும் என்னிடம் இருக்கிறது .ஆனால் கொரோனா  தொற்று பரவல் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நான் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் பர்கத் சிங்கை  கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று சந்தித்தேன். காது கேளாதோர் விளையாட்டுகளுக்கான கொள்கை இல்லாததால் மாநில அரசால் வேலை, ரொக்கப்பரிசு வழங்க முடியாது என அவர் என்னிடம் கூறினார். இதனால் மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது ‘இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |