பாங்காக்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி அதிரடியாக விளையாடி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பாங்காங்கில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சார்பாக சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவரும் விளையாடினர். இவர்களுக்கு எதிராக மலேசிய அணியை சார்ந்த ஆங் யூ சின், டீயோ ஈ யி ஆகிய இருவரும் விளையாடினர்.
பரபரப்பாக விளையாடப்பட்ட இப்போட்டியில் இந்திய அணி 21- 18, 24- 22 என்ற கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்குஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணியை சேர்ந்த ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவரும் முன்னேறியுள்ளனர்.
HIGHLIGHTS | Hold on to your seat as 🇲🇾 Ong/Teo 🆚 Rankireddy/Shetty 🇮🇳 keep you in suspense#HSBCbadminton #BWFWorldTour #ToyotaThailandOpen pic.twitter.com/L6CLr3SfQF
— BWF (@bwfmedia) January 22, 2021