Categories
தேசிய செய்திகள்

உலக பாரம்பரிய தினம்: செங்கோட்டை முன்பு தீபங்களை ஏற்றிய தொல்பொருள் ஆய்வு மையம்

உலக பாரம்பரிய தினத்தையொட்டி இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) செங்கோட்டைக்கு அருகே மண் விளக்குகளை ஏற்றி வைத்தது. பாரம்பரிய சின்னங்களை நினைவுகூரும் வகையில் இந்திய வரைபடத்தை விளக்குகளால் ஒளிர வைத்து பிரமிக்க செய்துள்ளது. நினைவு சின்னங்களுக்கும், புராதன இடங்களுக்கான உலக பாரம்பரிய தினம் ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தக் கொண்டாட்டம் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் (International Day for Monuments and Sites) தினமாக கொண்டாட பரிந்துரைக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே நாளடைவில் உலக பாரம்பரிய தினமாக மாறியது. இந்த நிலையில், இந்தியாவில் உலக பாரம்பரிய தினத்தை போற்றும் வகையில், செங்கோட்டை அருகே தீப விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன.

Categories

Tech |