அர்ச்சனாவின் தங்கை வளைகாப்பு விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சென்று அன்பு தான் ஜெயிக்கும் என்று கூறிக்கொண்டு தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கி கொண்டார். பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அர்ச்சனா தொடர்ந்து பல்வேறு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
அதில் ஒரு கொண்டாட்டமாக அர்ச்சனா கர்ப்பமாக இருந்த தன் தங்கைக்கு சீமந்தம் நடத்தியுள்ளார். அந்த சீமந்த விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து உள்ளனர். சீமந்த விழாவில் நிஷாவும் அர்ச்சனாவும் சேர்ந்து குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் சுற்றி நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.