உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதிக்கு அருகில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதால் அதை எடுத்துவிட்டு கோவிலை புதுப்பிப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இந்திய தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு தொல்லியல் துறை ஆய்வு நடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு அலாகாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தொல்லியல் துறை ஆய்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்ததோடு நீதிமன்றத்தின் உத்தரவை இந்திய தொல்லியல் துறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனால் தொல்லியல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தொல்லியல் துறை ஆய்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்ததோடு, வழக்கின் விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார். மேலும் வாரணாசி நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதியின் சுவரில் இருக்கும் இந்து சிற்பங்களை வழிபடுவதற்கு அனுமதி வழங்க கோரி சில ஹிந்து பெண்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கதா தாகும்