சீன நாட்டின் ஒரு அருங்காட்சியகத்தில் நவீன தொழில்நுட்பங்களால் மிகப்பழமையான சின்னங்கள் மறுசீரமைக்கப்பட்டு மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சீனாவில் உள்ள சிசுவான் என்ற மாகாணத்தில் கடந்த 1920 ஆம் வருடத்தில் சுமார் 12 சதுர கிமீ பரப்பளவில் சான்சிங்டுய் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை உலகிலேயே மிக முக்கிய தொல்ப்பொருள் கண்டுபிடிப்பாகும்.
அதாவது சுமார் 3000 வருடங்களுக்கு முன் அந்நாட்டை ஆட்சி செய்த ஷூ வம்ச அரசர்களால் கட்டப்பட்ட நகரின் இடிபாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பொருட்கள் சான்சிங்டுய் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அந்த அருங்காட்சியகத்திற்குள் சுமார் 10, 700 சதுர அடியில் மறுசீரமைப்பு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு அதிநவீன தொழில்நுட்பங்களால், தொல்பொருட்கள் மறுசீரமைக்கப்படுவதை மக்கள் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.