Categories
மாநில செய்திகள்

வில்வித்தை பயிற்சி… சிறுமி மீது பாய்ந்த அம்பு

வில்வித்தை பயிற்சியின் போது எதிர்ப்பாரா விதமாக சிறுமியின் மீது அம்பு பாய்ந்தது.

உலகில் பிரபல விளையாட்டான வில்வித்தை பிரிவு இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலங்களின் விருப்ப விளையாட்டாக உள்ளது. வடகிழக்கு பகுதிகளின் முக்கிய மாநிலமான அசாமின் சபுயா என்ற இடத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் மைந்துள்ளது.

இங்குச் சிறுவர்கள்  அதிகளவில் பயிற்சி பெறுகின்றனர். புதனன்று 12 வயதுடைய சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறுவன் ஒருவன் எய்த அம்பு எதிர் பகுதியில் பயிற்சி செய்து கொண்டிருந்த ஷிவாஞ்சினி கோஹைகன் என்ற சிறுமியின் நோக்கிப் பாய்ந்து தோள்பட்டையை துளைத்தது.

இந்நிலையில் படுகாயமடைந்த அந்த சிறுமிக்கு அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஷிவாஞ்சினிக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கு காரணம் :

விபத்து நடந்த இடத்திற்கு வில்லிவித்தை பயிற்சியாளராக மார்சி என்பவர் உள்ளார். இவர் அசாம் மாநிலத்தில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா யூத் தொடருக்கு சென்றுள்ளார். மார்சி இல்லாத தருணத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிறுவர்கள் தங்கள் இஷ்டப்படி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Categories

Tech |