டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, திகார் ஜெயிலில் அமைச்சர் சொகுசு வாழ்க்கை வாழ்வது குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. டெல்லியில் நடைபெறும் மாநகராட்சி தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை டெல்லி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பாஜகவின் 10 வீடியோக்கள் தேவையா அல்லது ஆம் ஆத்மி கட்சியின் 10 வாக்குறுதிகள் தேவையா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
இது பாஜகவின் 10 வீடியோக்களுக்கும், கெஜ்ரிவாலின் 10 வாக்குறுதிகளுக்கும் இடையே நடக்கும் போட்டி. இது எனக்கு தற்போது நன்றாக புரிந்து விட்டது. டிசம்பர் 4-ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த அனைத்து வீடியோக்களுக்கும் கண்டிப்பாக மக்கள் பதிலளிப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும் திகார் ஜெயில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி செய்திகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.