வேலைவாய்ப்பின்மை, விவசாய பிரச்னை, பொருளாதார மந்தநிலை போன்ற நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும்விதமாகவும் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நவம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.இது குறித்து விவாதிக்க பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளடக்கிய கூட்டம் நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்றது. முக்கிய கூட்டங்களில் இனி செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிறப்பித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி எடுக்கும் முக்கிய ரகசிய முடிவுகள் மற்ற கட்சியினருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படுகிறது. முக்கிய ஆலோசனைகளின்போது கட்சியின் மூத்தத் தலைவர்களே செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என சில தலைவர்கள் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் எனவே இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.