Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு எப்படி நடக்குது…. வீடு வீடாக சென்ற ஆசிரியை…. குவியும் பாராட்டு ..!!

ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் சரியாக கவனிக்கிறார்களா ? குறிப்பெடுக்கின்றார்களா? என ஆசிரியை வீடு வீடாக சென்று கவனிப்பது பலரின் பாரட்டை பெற்றுள்ளது.

கொரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் இந்த முடிவை எடுத்து நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றது. தமிழகத்திலும் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக தமிழக அரசு சார்பாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாணவர்கள் ஒரு சரியாக ஆன்லைன் வகுப்புகள் கவனிக்கிறார்களா ? அதனை குறிப்பெடுக்கின்றார்களா ? என்று ஆய்வு செய்ய ஒரு பள்ளி ஆசிரியை கிராமத்தில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும் மாணவர்களுக்கு புரியவில்லை என்றால் அனைவரையும் ஒருங்கிணைத்து பாடம் நடத்தி வருவது அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள குமராட்சி ஒன்றியத்தின் திருநாரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் ஹசினா தான் மாணவர்களின் நலனுக்காக இவ்வாறான செயல்பாடுகளில் இறங்கி உள்ளார். மேலும் மாணவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அக்கறையோடு மாணவியின் வீட்டிற்கு சென்று சொல்லி வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |