உங்களின் உதடுகள் காய்ந்து, வெடிப்புடன் உள்ளதுஎன்றால்… அதை அப்படியே சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்! இதற்கு முக்கிய காரணம் தோலில் ஈரப்பதம் இல்லாததே. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளால் உதடுகள் காய்ந்து வெடிப்புடன் காணப்படும்.
பாதுகாக்கும் வழிமுறைகள்:
சோற்றுக் கற்றாழை சாரையோ, அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காம்ல் இருக்கும்.
பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் உடம்பில் நீர் சத்து குறைந்து உதடுகளில் வெடிக்கும். எனவே உங்களுக்கு தாகம் எடுக்கவில்லையென்றாலும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும் உதட்டில் தோல்உரிந்து, வெடித்துப் புண்ணாகும். அதனால் சத்துள்ள நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.