Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அதிகாரிகளே இப்படியா” அலுவலக பெண்களிடம் அத்துமீறிய…. அரசு ஆய்வாளர் எஸ்கேப்….!!

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியின் 15 வது வார்டு சம்மட்டிபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர் முருகன் என்பவர், தனக்கும், தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் முருகன் மீது  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது ஆசைக்கு நாங்கள் இணங்காவிட்டால் வேலையை விட்டு தூக்கி விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார் என்று அப்பெண் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் அவர் மீது எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. எனவே முதல்வரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து சுகாதார ஆய்வாளர் முருகனை விசாரணைக்கு அழைத்து வரச் சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோன்று கணினி ஆபரேட்டராக வேலை செய்த பெண் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக புகார் அளிக்காமல் இருந்துள்ளார். வேலைக்கு செல்லும் பெண்கள் இதுபோல அத்துமீறலில் ஈடுபடும் ஆண்களிடமிருந்து தப்பிக்க, பெண்களுக்கு பாதுகாப்பாக சட்டம் இயற்ற வேண்டும்.

Categories

Tech |