இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக எம்.பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி தற்போது வரை சென்னையில் அதிகபட்சமாக 661 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கிறது.
அதன் பிறகு கோவையில் 186 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், காஞ்சிபுரத்தில் 135 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், திருவள்ளூரில் 70 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், அரியலூரில் 2 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இருக்கிறது. இதனையடுத்து கடலூரில் 11 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், தர்மபுரியில் 8 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், திண்டுக்கல்லில் 17 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், ஈரோட்டில் 31 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், கன்னியாகுமரியில் 21 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், கரூரில் 4 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், கிருஷ்ணகிரியில் 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், மதுரையில் 59 நிறுவனங்களும், நாகையில் 4 நிறுவனங்களும், நாமக்கல்லில் 15 நிறுவனங்களும், பெரம்பலூரில் 2 நிறுவனங்களும் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் 4 நிறுவனங்களும், சேலத்தில் 30 நிறுவனங்களும், சிவகங்கையில் 8 நிறுவனங்களும், தஞ்சையில் 22 நிறுவனங்களும், நீலகிரியில் 9 நிறுவனங்களும், தேனியில் 10 நிறுவனங்களும், தூத்துக்குடியில் 16 நிறுவனங்களும், திருச்சியில் 48 நிறுவனங்களும், நெல்லையில் 16 நிறுவனங்களும், திருப்பூரில் 28 நிறுவனங்களும், திருவண்ணாமலையில் 10 நிறுவனங்களும், திருவாரூரில் 3 நிறுவனங்களும், வேலூரில் 20 நிறுவனங்களும், விழுப்புரத்தில் 9 நிறுவனங்களும், விருதுநகரில் 11 நிறுவனங்களும் இருக்கிறது. மேலும் தமிழகத்தில் மொத்தமாக 1501 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தற்போது வரை செயல்பட்டு கொண்டிருக்கிறது.