சீனாவில் தோன்றிய கொரான வைரஸ் பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவியவருகிறது. உயிரிழப்பு அதிகரித்தது வந்த நிலையில் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தியது. தேசிய உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை 2020 ஜனவரி 30-ல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தொடங்கிய கொடிய கொரானா வைரஸுக்கு இதுவரை 3000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 11-ஆம் தேதி நிலவரப்படி கொரானா உறுதிப்படுத்தப்பட்ட 44000-க்கும் மேற்பட்டவர்களை கொண்டு ஆய்வு செய்ததில் சீன நோய் மற்றும் தடுப்பு மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வின்படி; நடுத்தர வயது மற்றும் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் வயதானவர்கள் இறப்பு வீதம் 10 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.
சீன நோய் மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின்படி:
- 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இறப்பு விகிதம்- 0%
- 10 – 39 வயதுக்குட்பட்டவர்கள் இறப்பு விகிதம்- 0.2%
- 40- 49 வயதுக்குட்பட்டவர்கள் இறப்பு விகிதம் – 0.4%
- 50 – 59 வயதுக்குட்பட்டவர்கள் இறப்பு விகிதம் – 1.3%
- 60 – 69 வயதுக்குட்பட்ட வர்கள் இறப்பு விகிதம் – 3.6%
- 70 – 79 வயதுக்குட்பட்டவர்கள் இறப்பு விகிதம் – 8%
- 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் இறப்பு விகிதம்- 14.8%
பாலின விகிதத்தை பொறுத்தவரை பெண்களை (1.7%) விட ஆண்கள் (2.8%) உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாகும்.