Categories
அரசியல் மாநில செய்திகள்

தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்யுறாங்க ? பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையை கடிமையாக  விமர்சனம் செய்தார்.  நீ  வார் ரூம் போட்டு,  வார் ரூம்ல ஆட்களை நியமித்து,  தொழில் அதிபர்களை மிரட்டி….  அந்த பதிவிலே சொல்லி இருக்கேன். நீங்க யாரும் பெருசா எடுத்துக்கல. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ?  யாரிடமிருந்து என்ன வசூலிக்கப்படுகிறது ? அப்படி எல்லாம்  எல்லாரும் பல்வேறு கருத்துக்களை சொல்றாங்க.

வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ?  யாரிடமிருந்து என்ன வசூலிக்கப்படுகிறது ? அப்படி எல்லாம்  எல்லாரும் பல்வேறு கருத்துக்களை சொல்றாங்க. இந்த மாதிரி எல்லாம் கூப்பிட்டு மிரட்டுறாங்க…  இந்த மாதிரி தொழிலே செய்ய முடியல,  அப்படிப்பட்ட சூழ்நிலையில்…   உன் கையில் வந்து பில் இருந்தா கொடுத்துட்டு போக வேண்டியது தானே…

இந்த டைம்ல வாங்கினேன்,  இந்த கடையில் வாங்கினேன்,  இந்த விலைக்கு வாங்கினேன் என சொல்லலாம். அல்ல அதை ஏன் மறைக்கணும் ? நான் ஏன் பேரணிக்கு வரும்போது வெளியிடுறேன்னு சொல்லணும் ? என்னை பொறுத்த வரைக்கும் நான் என்ன கேட்டனா…

நேர்மையான கருத்துக்கள் மின்வாரியத்தின் மீது சொன்னாலும் சரி,  அரசின் மீது சொன்னாலும் சரி,  எங்களின் அமைச்சர்கள் எல்லாருமே சேர்ந்து…என்னை பத்தியே சொல்ற சொல்லக் கூடிய கருத்துக்களில் உண்மை இருந்தால் அதை சரி செய்வதற்கு மின்வாரியம் தயாராக இருக்கிறது. நாங்க தயாரா இருக்கோம்.  சொல்லக்கூடிய கருத்துக்கள் அரசின் மீது அவதூறை பரப்பக்கூடிய குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடிய வகையில்…  உண்மைக்கு மாறான கருத்துக்களை பதிவிட்டால்….  நிச்சயமாக பதிலடி உண்டு என தெரிவித்தார்.

Categories

Tech |