தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து 3-வது முறையாக எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித்துக்காக அவருடைய ரசிகர்கள் செய்த காரியம் தற்போது இணையதளத்தில் படு வைரலாகி வருகிறது. அதாவது துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அஜித் ரசிகர்கள் சபரிமலை கோவிலுக்கு இருமுடி கட்டி சென்றுள்ளனர். அங்கு துணிவு படத்தின் போஸ்டரை வைத்திருக்கும் புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இணையதள வாசிகள் நடிகர் அஜித்துக்காக இப்படியும் ரசிகர்கள் இருக்கிறார்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.