Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை வியர்வையால் அவதியா? ….. துர்நாற்றத்தை போக்கும் இயற்கை குளியல்கள்! 

கோடை காலம் தொடங்கிவிட்டது. சிலருக்கு உடலில் அதிக வியர்வையால் அவதிப்படுவார்கள். என்ன செய்தாலும் வியர்வை நாற்றத்தை போக்க முடியாமல் இருப்பவர்கள் இயற்கை குளியலை பின்பற்றலாம். 

  • வியர்வையைப் போக்கும் மூலிகைக் குளியலுக்கு வாகைப்பூ அல்லது அதனுடைய  இலை, திருநாகப்பூ, பாச்சோத்திப் பட்டை, மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக இடித்து நன்றாக கொதிக்க வைத்து அந்த நீர் ஆறியபிறகு  குளிக்கலாம். இந்த குளியல் உடலில் ஏற்படும் அதிக வியர்வையை போக்கும்.
  • லவங்கப் பட்டை, பாச்சோத்தி, கடுக்காய், சந்தன மேல் பட்டை ஆகிய நான்கையும் ஒன்றாக இடித்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய  பிறகு குளிக்கலாம். இது வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். 
  • பன்னீர் ரோஜா இதழ்களை பூக்கள் மூழ்கும் வரை தேங்காய் எண்ணெய்  கலந்து சூரிய ஒளியில் சில நாட்கள் வைக்க வேண்டும். ரோஜாப் பூ இதழ்கள் ச‌ருகு போல் ஆனவுடன் எண்ணெயை வடிகட்டி தேய்த்து குளித்து வர  அதிக வியர்வை, வேர்க்குரு போன்ற பிரச்சனைகள் தீரும். 
  • கற்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், பன்னீர் ரோஜா கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி  குளித்தால் உடலில் உள்ள மாசுக்கள் நீங்கி உடல் சுறுசுறுப்பு அடையும். வேப்பிலை, வேப்பம் பட்டை போன்றவையும் குளியலுக்கு  பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • பாசிப்பயறு, ரோஜா, ஆவாராம் பூ, வெட்டி வேர் போன்றவற்றை நன்றாக அரைத்து தேய்த்து குளிக்கலாம். சளித் தொல்லை, சைனஸ் உள்ளவர்கள்  மேற்கண்ட மூலிகைக் குளியலை இப்படி செய்ய வேண்டும். 
  • இளஞ்சூடாக மூலிகை நீரை எடுத்து துணியால் தொட்டு உடலை துடைத்துக்கொள்ளலாம்,  இதன் மூலம் வியர்வையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். 
  • அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் வியர்வை நாற்றம் போவது மட்டுமின்றி அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்க்குரு சரியாகிறது.

Categories

Tech |