Categories
லைப் ஸ்டைல்

வாழைப்பழம் ரொம்ப சாப்பிடுறவங்களா நீங்க…. அப்ப இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க…!!

வாழைப்பழம் அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று இங்கே பார்க்கலாம்.

பொதுவாக வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க கொடுக்கப்படுகிறது. அதேபோல் எடைகுறைப்பது முதல் பல்வேறு விஷயங்களுக்கான டயட்டில் இருப்பவர்களும் அன்றாடம் வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறார்கள். காலை உணவுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாகவும் இருப்பதாக நிபுணர்களால் கூறப்படுகிறது. மேலும் பலருக்கு இரவு சாப்பாட்டிற்கு பின் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு தூங்கும் பழக்கம் இருக்கிறது.

வாழைப்பழத்தில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் வாழைப்பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகின்றது.

வாழைப்பழம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்:

1.தினமும் 1 அல்லது 2 பழங்கள் என்ற வீதத்தில் எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடும் போது அதுவே உடல் எடையை அதிகரிக்கவும் செய்யும். ஏனெனில் வாழைப்பழத்துக்கு எடையை அதிகரிக்கும் தன்மையும் உண்டு. அதிலும் தற்போதைய காலங்களில் கிடைக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2.இரவில் விழித்திருந்து வேலை பார்ப்பவர்கள் நிச்சயம் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது. வாழைப்பழத்தில் உள்ள அதிக அளவிலான அமினோ அமிலங்களானது கார்போ ஹைட்ரேட்டுகளுடன் சேர்ந்து சோம்பல் உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் இரவில் தலைவலியையும் ஏற்படுத்தும்.

3.ரத்த அழுத்தத்திற்காக மாத்திரை மற்றும் மருந்துகளை சாப்பிட்டு வருபவர்கள் வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

4.பொதுவாக மலச்சிக்கலைத் தீர்க்கவும் ஜீரணத்தை அதிகரிக்கவும் வாழைப்பழத்தைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிறைய வாழைப்பழங்கள் சாப்பிடுவதும் அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள அதிக அளவிலாக பொட்டாசியம் மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறை ஏற்படுத்துகிறது.

5.சர்க்கரை அளவு சராசரியாக இருப்பவர்களும் அளவுக்கு அதிகமாக வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க நிறையவே வாய்ப்பு இருக்கிற..

Categories

Tech |