நவம்பர் 30-ஆம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கனடா நாட்டுக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உலக நாடுகளை அச்சறுத்திவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டவர்கள் வருகிற 30-ஆம் தேதி முதல் கனடா வர அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுவரை அமெரிக்காவின் பைசர், மடனா, ஜான்சன் அன் ஜான்சன் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜனகா ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே கனடாவிற்கு வர அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.