பிரபலமான விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு நேற்று நடந்த எபிசோட்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் படி 19 பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். இதில் 18 பொம்மைகளை எடுத்து போட்டியாளர்கள் ஒரு அறையில் வைக்க வேண்டும்.
மீதம் இருக்கும் ஒரு பொம்மையில் எந்த போட்டியாளரின் பெயர் இருக்கிறதோ அவர் கேமில் இருந்து வெளியேற்றப்படுவார். இந்த கேம் டாஸ்க்கில் பல்வேறு விதமான சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி போட்டியாளர்களை தனலட்சுமி தள்ளிவிடுகிறார். இதனால் அசீம் ஆத்திரம் அடைந்து நீயும் ஒரு பொண்ணு தானே? உனக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா? என்று கோபத்தில் கத்துகிறார். மேலும் இந்த புரோமோ வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.