இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மக்கள் தங்களுடைய வீடுகளில் வைபை கனெக்சன் வைத்து பயன்படுத்துகிறார்கள். இந்த பயனர்களுக்கு குறைந்த அளவில் டேட்டா தேவைப்படுகிறது. இவர்களுக்கு ஜியோவில் அசத்தலான டேட்டா பிளான்கள் இருக்கிறது அது பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி ஜியோவின் 149 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 20 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவும் கிடைக்கிறது. அதன்பிறகு ஜியோவின் 179 ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 100 எஸ்எம்எஸ், 1 ஜிபி டேட்டா போன்றவைகள் கிடைக்கும்.
இதனுடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற இலவச சந்தாவும் கிடைக்கும். இதனையடுத்து 199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 23 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்றவைகள் கிடைக்கும். அதன் பிறகு 209 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்றவைகளும் கிடைக்கும். மேலும் 239 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்றவைகளுக்கான இலவச சந்தா போன்றவைகள் கிடைக்கும்.