Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமையா இருக்கீங்க… ”அதான் இதுக்கு காரணம்”… அதிமுகவை கடுப்பேத்திய உதயநிதி…!!

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ படிப்பில் பி.சி/ எம்.பி.சி-க்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதியை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே இருக்கும் 27 சத இட ஒதுக்கீட்டை தரவும் பாஜக அரசு மறுக்கிறது. அதிமுக அரசின் அடிமைத் தனத்தால் தமிழகத்துக்கு விழுந்த பெரிய அடி இது.

கமிஷன் அடிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ள எடுபுடி அரசு வலுவான வாதத்தை எடுத்து வைக்காததன் மூலம் இட ஒதுக்கீட்டை அழிக்கத்துடிக்கும் பாஜகவுக்கு துணை போயுள்ளது என டுவிட் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று வெளியாகிய தீர்ப்புக்கு அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து,  கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய இந்த கருத்தும் அரசியல் ரீதியாக விவாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |