Categories
தேசிய செய்திகள்

நீங்கள் ATM பயன்பாட்டாளரா…? ரிசர்வ் வங்கியிடம் மனு….. கூடுதல் கட்டணம் விதிக்க வாய்ப்பு…!!

இனி ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதலாக விதிக்கப்படும் அபராத கட்டணம் ரூ15லிருந்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியின் ஏடிஎம் ஆடிட்டர்  மற்றும் உரிமையாளர்கள் சார்பில் ரிசர்வ் வங்கியில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஏடிஎம் இயந்திரத்தை இயக்குவதற்கு அதிகம் செலவு ஏற்படுவதால் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு வைக்கப்படும் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது வரை ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுத்தால் ரூபாய் பதினைந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் விலை மேலும் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ATM உபயோகிக்கும் மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |