மக்கள் கடன் வாங்குவதற்கு ஆன்லைன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று நிறைய பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே அங்கீகாரம் இல்லாத கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் எனவும், அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் ஆப் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது, அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் ஆப்கள் மீது பொதுமக்கள் புகார் கொடுக்கலாம் என ரிசர்வ் வாங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடன் வாங்குவதற்கு ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்படாவை என்றும், கடன் வாங்கியவர்களின் விவரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வன்முறையை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.