யோனா ஆப் மூலமாக டாட்டா சஃபாரி காரை வாங்க புக் செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றது.
நீங்கள் புது கார் வாங்குவதற்காக திட்டம் வைத்திருந்தால் இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு. உங்களுடைய கனவு காரை வீட்டுக்கு வாங்கி வருவதற்கு எஸ்பிஐ வங்கி ஒரு அட்டகாசமான சலுகையை வழங்கியுள்ளது. தற்போது சிலர் இரு சக்கர வாகனங்கள் தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் சிலர் கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக காரை வாங்க விரும்புகின்றனர். எனவே புதிய சலுகைகளை தற்போது எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
கார் கடன் சலுகை:
எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ செல்போன் செயலியான யோனா ஆப் மூலமாக பல்வேறு சலுகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அறிமுகமாகியுள்ள டாட்டா சபாரி காருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் இந்த காரை அதிகமாக புக் செய்து வருகின்றனர். இந்த காரை எஸ்பிஐ யின் யோனா ஆப் மூலமாக புக் செய்தால் பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
என்னென்ன சலுகைகள்?
யோனா ஆப் மூலமாக டாடா சஃபாரி காரை புக் செய்தால் உங்களுக்கு 0.2 சதவீதம் சலுகை கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் பிராசசிங் கட்டணம் முற்றிலுமாக உங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும். இது போல 100 சதவிகித பைனான்ஸ் வசதிகள் கிடைக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உங்கள் செல்போனில் யோனோ ஆப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், shop & order என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில், automobile பிரிவை தேர்வு செய்து Tata motors பக்கத்தில் புக்கிங் செய்ய வேண்டும்.