ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதை பார்த்து கொள்ளுங்கள்.
ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஆதார் கார்டு திருத்தம் செய்வது மற்றும் அதற்கான ஆவணங்களை என்னென்ன என்று பார்க்கலாம். ஆதார் அமைப்பின் அடிப்படை மொத்தம் முப்பத்திரண்டு ஆவணங்கள் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அவற்றை அப்டேட் செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளமான uidai.gov.in என்ற முகவரியில் சென்று Adhar Update என்ற ஆப்ஷனில் சென்று அப்டேட் செய்யலாம். அல்லது இ-சேவை மையங்களில் நேரடியாக சென்று அப்டேட் செய்ய முடியும். தனிநபர் அடையாள ஆவணமாக பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முகவரி ஆவணமாக பாஸ்போர்ட், பேங்க் ஸ்டேட்மென்ட், பாஸ்புக்,, ரேஷன் கார்டு போஸ்ட் ஆபீஸ் ஆக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட், வாகன ஓட்டுநர் உரிமம், பிறப்பு சான்றிதழ், பான் கார்டு போன்றவை ஏற்படுகிறது.
மேலும் உங்கள் முகவரியை அப்டேட் செய்வதற்கு uidai.gov.in என்ற இணையப் பக்கத்தில் சென்று update Adhar என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, update your address online என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்த பக்கத்தில் உங்களது மொபைல் எண்ணைப் பதிவிட்டு get OTP என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதையடுத்து உங்களது செல்போனுக்கு ஒரு OTP வரும். அதைப் பதிவிட்டு சமர்ப்பிக்கவும். address update என்பதில் சென்று உங்களின் முகவரி குறித்த விவரங்களைப் பதிவிடவும். பின்னர் முகவரிக்கு உண்டான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். இதன் பின்னர் உங்களுக்கு ரெஃபரன்ஸ் நம்பர் ஒன்று வழங்கப்படும். அதை வைத்து நீங்கள் ஆதார் மாற்ற விவரங்களை டிராக் செய்ய முடியும்.