Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வறுமையில் இருக்கீங்களா ? கவலையை விடுங்க… இனி மாதம் ரூ.3,000… அட்டகாசமான திட்டம் தொடக்கம் …!!

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு பெற வேண்டும். பிறகு இளநிலை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர்களிடம் இரண்டு அல்லது மூன்று வருட பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் என்பது இருக்கிறது. கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டம் படிக்கும் மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவது குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது.

இக்காலகட்டத்தில் அவர்கள் மிகவும் வறுமையான நிலையில் இருக்கின்றார்கள். இதனால் ஒரு சிலர் வேறு தொழிலுக்குச் செல்லும் நிலையில் உள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு இளம் வழக்கறிஞ்சர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. தமிழக முதலமைச்சர் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார். இந்த திட்டத்தினால் இளம் வழக்கறிஞ்சர்களுக்கு இரண்டாண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை திட்டத்தை பெறுவதற்கான தகுதிகளை பொருத்தவரை…

அவர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் மட்டுமே படித்தவர்களாக இருக்க வேண்டும்.

பெற்றோர்களுடைய ஆண்டு வருமானம் இரண்டு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதேபோல் பெற்றோர்கள் அரசு ஊழியர்களாக இருக்கக் கூடாது.

இது போன்ற பல்வேறு விதமான தகுதிகள் வரையறுக்கப்பட்டு, இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் மூலமாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.  அவர்களுக்கு மாதம் மூன்றாயிரம் ரூபாய் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழக அரசால் இன்று முதல் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |