Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டவரா நீங்கள்…?? அப்போ இதெல்லாம் செய்ங்க… உங்களுக்கான “வழிகாட்டு நெறிமுறைகள்” இதோ…!!

கொரோனாவால் குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்வலி, இருமல், தொண்டைவலி, மூச்சுத் திணறல் போன்ற தொல்லைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.  இதனால் சிகிச்சைக்கு பிறகு, அவர்கள் வீட்டிற்கு சென்ற உடன்  பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அவையாவன,

  •  கொரோனா குணமானபிறகு தேவையான அளவு வெந்நீர் குடிக்க வேண்டும்.
  • நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்கும் ஆயுர்வேத, சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அஸ்வகந்தா பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை 15 நாட்களுக்கு சாப்பிடலாம்.
  • நாள்தோறும் ஒரு பெரிய அளவிலான நெல்லிக்காயை சாப்பிட்டு வர வேண்டும்.
  • கொதிக்கவைத்த பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்.
  • நாள்தோறும் காலையில் ஒரு ஸ்பூன் சயவனப்பிராஷ் மருந்தை சாப்பிட்டு வர வேண்டும்.  இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |