நகை அடகு வைப்பதற்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பது இப்போது பார்க்கலாம்.
தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு.
நகை கடன் வாங்க நினைத்தால் எந்த வங்கியில் வாங்க வேண்டும்? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி குறைவு? என்பது குறித்து எல்லாவற்றையும் ஆலோசிக்க வேண்டும். சென்ற ஆகஸ்ட் மாதத்தில் தங்க நகை கடன்களுக்கான விதிமுறையில் ரிசர்வ் வங்கி சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இதன்படி தங்கத்தின் மதிப்பில் 90% வரையில் கடன் வாங்க முடியும். நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது .
எந்த வங்கியில் குறைந்த வட்டி என்பதை பார்க்கலாம்:
பஞ்சாப் & சிந்த் பேங்க் – 7%
பேங்க் ஆஃப் இந்தியா – 7.35%
கனரா பேங்க் – 7.65%
கர்நாடகா பேங்க் – 8.38%
இந்தியன் பேங்க் – 8.50%
யூசிஓ பேங்க் – 8.50%
ஃபெடரல் பேங்க் – 8.50%
பஞ்சாப் நேஷனல் பேங்க் – 8.75%
யூனியன் பேங்க் – 8.85%
ஜே & கே பேங்க் – 8.90%
செண்ட்ரல் பேங்க் – 9.05%
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் – 9.25%
ஹெச்டிஎஃப்சி பேங்க் – 9.50%
பேங்க் ஆஃப் பரோடா – 9.60%