Categories
உலக செய்திகள்

நீங்க சீனாவுக்கு சப்போர்ட்டா ? எரிச்சல் அடைந்த அமெரிக்கா …!!

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது என அமெரிக்கா பாதுகாப்பு துறை ஆலோசகர் கூறியுள்ளார்

சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கொரோனா தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற உண்மையை முதலில் கூறாத காரணத்திற்காகவும்உலக சுகாதார அமைப்பிற்கு அளித்துவந்த நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் கூறியிருப்பதாவது “இந்த நெருக்கடியான சூழலில் உலக சுகாதார அமைப்பு அதன் நம்பகதன்மையை இழந்து விட்டது. பல வருடங்களுக்கு முன்னரே அதன் உண்மை தன்மையை இழந்துவிட்டது. வருடத்திற்கு 500 கோடி டாலர்களை அமெரிக்கா உலக சுகாதார அமைப்புக்கு  செலவிடுகிறது. அதிலிருந்து பத்தில் ஒரு பகுதியை மட்டுமே சீனா அந்த அமைப்பிற்கு வழங்கி வருகிறது.

இருப்பினும் சீனாவின் பரப்புரை கருவியாகவே உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது. கடந்த 14ஆம் தேதி இந்த தொற்று மனிதனிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவாது எனவும் சீனாவில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியை அந்த நாடு சிறந்த அளவில் கையாலுவதாகவும் தெரிவித்தது உலக சுகாதார அமைப்பு. ஆனால் இவை இரண்டுமே முற்றிலும் தவறான தகவல்கள். சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் தடை விதித்தன.

கடந்த உலக சுகாதார அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் இதற்கு கண்டனம் தெரிவித்தது. அந்த அமைப்பின் தவறான வழிகாட்டுதல்களில்  இதுவும் ஒன்று. சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு வைரஸ் பரவுவதை சிறந்த அளவில் கட்டுப்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டியது. சிறந்த அளவில் கட்டுப்படுத்தி இருந்தால் எவ்வாறு 184 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தொற்று பரவி இருக்கும்.

இதன் காரணமாகவே உலக சுகாதார அமைப்பு அதன் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது. அமெரிக்கா நட்பு நாடுகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பின் கட்டமைப்பை மாற்ற முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைப்பிற்கு வழங்கப்பட்ட நிதியை அமெரிக்கா நிறுத்தி இருந்தாலும் அண்டை நாடுகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், செஞ்சிலுவை சங்கங்களுக்கும் நேரடியாக அமெரிக்கா நிதி அளித்து வருகிறது” என்றார்

Categories

Tech |