Categories
கிரிக்கெட் விளையாட்டு

நிச்சயம் பண்ணிட்டாங்களா..? ஹர்திக் பாண்டயாவுக்கு முன்னாள் காதலி வாழ்த்து…!!

திருமண உறவில் நுழையவிருக்கும் ஹார்திக் பாண்ட்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கும் வேளையில், அவரது முன்னாள் காதலி என கிசுகிசுக்கப்பட்ட ஊர்வசி ரவுத்தேலாவின் வாழ்த்து அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

மும்பை: செர்பியா நாட்டின் நடிகையுடன் நிச்சயதார்த்தம் ஆகியிருப்பதை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அவரது முன்னாள் காதலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு தனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாகத் திகழும் திருமண பந்தம் குறித்து அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா. செர்பியா நாட்டின் நடிகையும், டான்ஸருமான நடாஷா ஸ்டேன்கோவிக் என்பவருடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதை, ‘நான் உனக்காக. நீ எனக்காக. இது அனைவருக்கும் தெரியும்’ என்று தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு போட்டோ, விடியோவை பகிர்ந்திருந்தார்.

இதையடுத்து ஹர்திக்கின் முன்னாள் காதலி எனக் கிசுகிசுக்கப்பட்ட ஊர்வசி ரவுத்தேலா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களது நிச்சயதார்த்தத்துக்கு எனது வாழ்த்துகள். காதல், மகிழ்ச்சி நிரம்பியதாக உங்களது உறவு இருக்கட்டும். சிறப்பான வாழ்க்கை, அழியாத காதல் உங்களுக்கு அமைய வாழ்த்துகிறேன் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஹார்திக் பாண்ட்யா – நடாஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே நடாஷாவின் முன்னாள் காதலரான டிவி நடிகர் ஆலி கோனி, காதல் எமோஜிக்களால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாச் பாலியே என்ற ரியாலிட்டி டான்ஸ் ஷோ நிகழ்ச்சியில் நடாஷா – ஆலி கோனி ஆகியோர் ஜோடியாக நடனமாடினர்.

https://www.instagram.com/p/B6xrw7WlubB/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |