Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”பெப்பர் நண்டு சூப்” கேட்டதும் நாக்கு உறுதா ? இப்படி செய்யுங்க நல்லா ருசிங்க…!!

தேவையான பொருட்கள்:

நண்டு 400 கிராம்,

மிளகு தூள் 2 ஸ்பூன்,

சீரகத் தூள் 1 ஸ்பூன்,

இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்,

லெமன் சாறு அரை ஸ்பூன்,

கொத்தமல்லி தழை ,

உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.வெந்த நண்டின் சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் மிளகுத் தூள் , சீரகத் தூள் , இஞ்சி பூண்டு பேஸ்ட்,  தக்காளி , கொத்தமல்லி தழை , உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு சூடான சூப்பை பரிமாறவும்.

Categories

Tech |