தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு வர்மா மற்றும் மகான் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இணையும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் துருவ் சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் அவரிடம் நீங்கள் தல ரசிகரா அல்லது தளபதி ரசிகரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு துருவ் நான் தளபதி ரசிகன் என்று கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோவை தற்போது தளபதி விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Dhruv Vikram about @actorvijay Anna ❤️#Varisu https://t.co/Pq3Mql44rz
— Gopakumar Parthan VJ 🔥🧊 (@Gopu_VJ) October 12, 2022