இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த இணையதளத்தில் நாள்தோறும் வித்தியாசமான பல பொழுதுபோக்கு அம்சங்களும், வீடியோக்களும் வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு யானை டிரம்ஸ் வாசிக்கும் வீடியோவானது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் யானைக்கு எப்படி டிரம்ஸ் வாசிக்க வேண்டும் என்று முதலில் சொல்லிக் கொடுக்கிறார்.
அதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த யானை டிரம்ஸ் குச்சிகளை தன்னுடைய தும்பிக்கையில் வாங்கி தன்னுடைய பக்கமாக ட்ரம் இழுத்து வாசிக்க ஆரம்பிக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் ஒரு யானை இவ்வளவு அழகாக டிரம்ஸ் வாசிக்கிறதா என்றும் பலர் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருவதோடு, லைக்ஸ்களையும் குவித்து வருகிறார்கள்.
There is a drummer in all of us. 🐘😆 pic.twitter.com/FcuLmoMZMf
— Eric Schiffer (@ericschiffer) November 10, 2022