அர்ஜென்டினா அவசரகால பயன்பாட்டுக்காக சீன தயாரிப்பான கான்சினோ என்ற தடுப்பூசிக்கு அனுமதியளித்திருக்கிறது.
அர்ஜென்டினா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு அடுத்ததாக தினசரி அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தற்போது வரை 41 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 85,000 நபர்கள் பலியாகியுள்ளனர். எனவே அங்கு மக்களுக்கு தடுப்பூசிகள் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது.
சைனோபார்ம், ஆஸ்ட்ரா செனகா மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அர்ஜென்டினாவில் மொத்தம் 4.5 கோடி மக்கள் உள்ளனர். அதில் 1.2 கோடி மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் டோஸ் தடுப்பூசி 32 லட்சம் நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சீன தயாரிப்பான கான்சினோ என்ற தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்தடுப்பூசியானது ஒரு டோஸ் கொண்டது. இதுகுறித்து அர்ஜெண்டினாவின் சுகாதாரத்துறை கூறுகையில், முதலில் கான்சினா தடுப்பூசிகள் 54 லட்சம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.