Categories
அரசியல் உலக செய்திகள்

கால்பந்தின் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா…. கொண்டாட்டத்தில் ரசிகை செய்த காரியம்… எழுந்துள்ள சர்ச்சை…!!!

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு ரசிகை திடீரென்று தன் மேலாடை கழட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கால்பந்து உலக கோப்பை போட்டியானது, கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 36 வருடங்கள் கழித்து பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கால்பந்து சூப்பர் ஸ்டாரான, மெஸ்ஸிக்கு நம் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஏக்கம் இருந்தது.

அந்த மிகப்பெரிய கனவானது, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நினைவானது கடைசியா க பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அவரின் கனவு நனவாகிவிட்டது. இந்த வெற்றி, அர்ஜென்டினா நாட்டையே குதூகலிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வென்றதை கொண்டாடுவதற்காக ஒரு ரசிகை திடீரென்று தன் மேலாடையை கழற்றி சுற்றினார்.

இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சைகளை உண்டாக்கியது. கத்தாரின் சட்ட திட்டங்கள் படி, பொது இடங்களில் யாரும் ஆடைகள் இன்றி உடலை நிர்வாணமாக காண்பிக்கக்கூடாது. மீறினால், தண்டனை அல்லது அபராதம் விதிப்பார்கள். மேலும், அந்நாட்டில் கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் அந்த ரசிகை செய்த செயல் சர்ச்சையானதால், அவர் கைதாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் அந்த பெண் குறித்து விவாதங்கள் நடக்கின்றன.

Categories

Tech |