அன்பழகன் உருவப்படம் திறப்பு விழாவில் வேல்முருகன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார்.
திமுகவின் பொதுச்செயலாளர் மறந்த பேராசிரிய அன்பழகனின் உருவப்படம் திறப்பு விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் , திமுக சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முக .ஸ்டாலின் அன்பழகன் போட்டோவை திறந்து வைத்ததை தொடர்ந்து அனைவரும் அன்பழகனும் புகழஞ்சலி செலுத்தினர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசும் போது , இது மறைந்த அன்பழகனுக்கான நிகழ்வு என்பதை மறந்து திமுக தலைவர் முக.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார். அவர் பேசியதில், அய்யா பெரியார் , அண்ணா , தலைவர் கலைஞருக்கு பிறகு இன்றைக்கு தமிழ் சமூகம் பாடமாக பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தலைவராக இருந்த பேராசிரியர் பெருந்தகை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
அந்த பேராசிரியர் பெருந்தகை அவர்களாலும், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களாலும் அடையாளம் காட்டப்பட்டு, பன்முகத் தன்மையையும் ஒருங்கே பெற்று நாளைய பேராசிரியராக , நாளைய முத்தமிழ் அறிஞராக , நாளைய பேரறிஞ்சர் அண்ணாவாக, கொள்கை பிடிப்பில் தந்தை பெரியாரின் தம்பியாக , பேரனாக தளபதியும் , வாழ்வார்கள் வாழ்ந்துகிறோம் இந்த தருணத்தில்.
அதே நேரத்தில் பேராசிரிய பெருந்தகை இன்று நம்மோடு இல்லை. திராவிட இயக்கத்தின் மாபெரும் தூண்கள் சாய்ந்து கொண்டு இருக்கிறது. திராவிட இயக்கம் தமிழ் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டினை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்வதற்கான பேராசிரிய பெருமக்கனை போன்று வரலாற்று பேராசிரிய பெருமகனை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று இருக்கின்றது.
அந்தவகையில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற மகத்தான கட்சி ஒரு அரசியல் இயக்கம் தன்னை எப்படி வளர்க்க வேண்டும். ஒரு அரசியல் இயக்கம் தன்னை வளர்த்து உருவாக்கியவர்களை எப்படி போற்ற வேண்டுமென்று , சமகால அரசியலில் நாளை அரசியல் கட்சி தொடங்குவதற்கு கூட பாடமாக சொல்லித் தரக் கூடிய மாபெரும் அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று வேல்முருகன் புகழாரம் சூட்டினார்.