மேஷம் ராசி அன்பர்கள்…!! இன்று தேவையான பணம் இருப்பதால் திடீரென ஏற்படும் செலவுகளை சமாளித்து விடுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் யோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று அனைவரிடமும் அன்பாகவும் பண்புடனும் நடந்து கொள்வீர்கள். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அதேபோல் தொழில் வளர்ச்சிக்காக இன்று கடுமையாக உழைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
தனவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாக செல்லும் உடல் ஆரோக்கியமும் ரொம்ப நல்லபடியாகவே இருக்கும்.திருமண முயற்சிகளுக்காக காத்திருந்தவர்களுக்கு திருமண யோகம் இன்று ஏற்படும். கல்யாணக் கனவுகள் நனவாகும். உடலில் வசீகர தன்மை கூடும். இன்று எதிர்பாராத காரியங்கள் கூட ஓரளவு சிறப்பானதாக அமையும். ஆன்மீக பயணம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். கூடுமானவரை விளையாட்டை ஓரம்கட்டிவிட்டு பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்