மேஷ ராசி அன்பர்களே…!! இன்று செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று அடுத்தவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு கொஞ்சம் இருக்கும்.
எதிலும் கவனம் இருக்கட்டும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு அனைத்து வகையிலுமே நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். குடும்பத்தை பொறுத்த வரை எந்தவித பிரச்சினையும் இல்லை. சரியான சூழலுடன் நடந்து செல்லும். அதே போல கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். நீங்கள் தைரியமாக எந்தவித காரியத்தையும் செய்யலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்