எதிலும் போராடி வெற்றி பெறக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!! இன்று புண்ணிய தல பயணங்களால் நன்மை ஏற்படும் நாளாக இருக்கும். ஆதாயம் இல்லாமல் எந்த காரியத்திலும் இறங்க மாட்டீர்கள். பிறரை கட்டளை இடுகின்ற அரசு உயர்பதவிகள் கிடைக்கக்கூடும். இன்று உங்களது ஆலோசனை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றியும் அடைவார்கள். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகள் விலகிச்செல்லும். தடைபட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பீர்கள். செலவுகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். உடன் பணிபுரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்கக் கூடும். இன்று வெளியூர் பயணத்தில் மட்டும் கவனமாக இருங்கள்.
பொருட்கள் மீதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் யாரிடமும் எந்த விதமான கடன்கள் வாங்காதீர்கள். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முயற்சியின் பேரிலே சிறப்பை பெறமுடியும். சக மாணவருடன் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு நீல நிறம் அதிர்ஷ்ட நிறம் என்பதால் நீல நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை வைத்து கொள்ளுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துமே நல்லபடியாக நடக்கும். தயவுசெய்து இதை மட்டுமே செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்