மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தனலாபம் உங்களுக்கு அதிகரிக்கும் நாளாக இருக்கும். உதவி என்று வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். பிரிந்த தம்பதியர் இணைந்து மகிழ்வார்கள். எல்லா வகையிலுமே உங்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். இன்று மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் அமையும். இன்று மாணவர்கள் பாடங்களில் மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு உதவும். சக மாணவருடன் அனுசரித்துச் செல்லுங்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்