மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரிடம் கேட்ட உதவி உங்களுக்கு கிடைக்கும். செயல்களில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி உருவாகும். பணவரவும் நன்மையை கொடுக்கும் இன்று உறவினர் சுப செய்தி சொல்லக்கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியையும் எட்டிப் பிடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரும்.
வருமானம் இரு மடங்காக இருக்கும். பாராட்டுகள் குவியும். அதனால் உங்கள் மனம் திருப்தியாக காணப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று அதிர்ஷ்டமான வாய்ப்புகளையும் நீங்கள் பெறக்கூடும். அதேபோல் மாணவர்கள் இன்று கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பு. அதேபோல இன்று உங்களுக்கு சொத்துக்கள் சேரும் நாளாகவும் இருக்கும்.
வாகன யோகம் ஏற்படும். தன வரவு தாராளமாக கிடைக்கும். இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். இன்றைய நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் அனைத்து விஷயங்களுமே நன்மையை கொடுப்பதாக இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது சிவப்பு நிறத்தை பயன்படுத்துங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும். அதுபோல இன்று நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்