மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மனைவியால் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பேரும் புகழும் அடைய கூடும். பெரியோர்களின் ஆலோசனைப் படி நடந்தால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். இ ன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களையும் படியுங்கள்.
மன கஷ்டம் பண கஷ்டம் அனைத்துமே இன்று சரியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். கலைத்துறையை சார்ந்தவர்கள் கொஞ்சம் கடுமையாகவே உழைக்க வேண்டியிருக்கும். ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் உங்கள் திறமையை காட்டுவது சிறப்பு. எதிர் பார்த்த பணம் கிடைக்கும். உங்களுடைய வசீகரப் பேச்சால் இன்று அனைத்துமே பூர்த்தி ஆகும்.
இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சித்தர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்