Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “எல்லா பிரச்சனைகளும் சரியாகும்”… செல்வ செழிப்பு ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராத விரயங்களை சந்திக்கும் நாளாக இருக்கும். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத் தேடி வரக்கூடும். இடமாற்றங்கள்  போன்றவை நடக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று எல்லா பிரச்சனைகளும் சரியாகும். செல்வ செழிப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். அடுத்தவர் கொடுத்த வேலையை எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுங்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாத நண்பரும் உறவினரும் வழிய வந்து பேசுவார்கள்.

சுபச்செலவுகள் கொஞ்சம் இருக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வதாக இருந்தால் பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். பயணங்கள் அலைச்சல் தரக் கூடியதாகவே இருக்கும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு இன்று லாபம் பன்மடங்கு உயரும். அதனால் மன மகிழ்ச்சி ஏற்படும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். மாணவர்கள் கொஞ்சம் கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டும்.

தயவு செய்து பாடத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்க முடிந்தால் வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |