Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “நண்பரின் ஆலோசனை ஊக்கத்தைக் கொடுக்கும்”… எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்களில் கவன சிதறல்கள்  ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று எதிர்பாராத இடமாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படக்கூடும்.

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் மன வருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான நிலை காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல் ஆர்வமுடன் படிப்பீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |